தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகால் சபையின் பொறியியலாளர்கள் சங்கம் சில தொழிற்சங்க நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவருடனான சந்திப்புகளில் பங்கேற்காமை, டெண்டர் மதிப்பீட்டுக் குழுக்களில் பங்கேற்காமை உள்ளிட்ட சில தொழிற்சங்க நடவடிக்கைள் கடந்த 05ஆம் திகதி காலை 8.30 மணி முதல் ஆரம்பிக்கப்பட்டன.
இதனால் தற்போது காலியாக உள்ள மேலதிக பொது முகாமையாளர் மேல், மேலதிக பொது முகாமையாளர் திட்டப்பணிகள் ஆகிய இரண்டு பதவிகளுக்கும் அவசரமாக ஆட்களை நியமிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
நீர் வழங்கல் சபையின் தலைவர் அந்த இரண்டு பணியிடங்களையும் நீக்கிவிட்டு அதற்குப் பதிலாக மேலதிக பொது முகாமையாளர் தணிக்கை மற்றும் மேலதிக பொது முகாமையாளர் வர்த்தகம் ஆகிய புதிய நியமனங்களை வழங்குவதற்கு செயற்பட்டு வருவதாக பொறியியலாளர்கள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
தமது சங்கத்தின் கோரிக்கைக்கு உரிய முறையில் பதிலளிக்காவிடின், சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயார் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பொறியியலாளர்கள் சங்கம், தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇