சீனாவை தளமாக கொண்டுள்ள விரிவான உலகளாவிய ரீதியிலான அரச சார்பற்ற மற்றும் இலாபத்தை நோக்கமற்ற சுற்றுலா அமைப்பான உலக சுற்றுலா கூட்டமைப்பில் இலங்கை இணையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உலக சுற்றுலா கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பல தேசிய மற்றும் பிராந்திய சுற்றுலா சங்கங்கள், செல்வாக்கு மிக்க சுற்லுலா அல்லது சுற்றுலா தொடர்பான நிறுவனங்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் தனிப்பட்டவர்களை கொண்டுள்ளது.
இந்த அமைப்பில் இணைவதன் மூலம் சுற்றுலா தொடர்பான வர்த்தக சந்தைப்படுத்தல் மூலம் சிறப்பான நன்மைகள் கிடைப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி பணியகத்தின் தலைவர் சாலக்க கஜபாகு தெரிவித்துள்ளார்.
இதுதவிர, இலங்கையின் சுற்றுலா நடவடிக்கைகளை ஏனைய பல நாடுகளுடன் இணைத்து விஸ்தரிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, இந்த கூட்டமைப்பின் தலைவர் உட்பட உயர்மட்ட உறுப்பினர்கள் சீனாவில் இருந்து இலங்கைக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தனர்.
அவர்களுடன் மேற்கொள்ளப்பட்ட நேரடி பேச்சுவார்த்தைகள் மூலம் அளப்பரிய நன்மைகள் சுற்றுலாத் துறையினருக்கு கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇