மழைக்காலம் வந்தவுடனே சிலருக்கு கால்களில் சேற்றுப்புண் வந்துவிடுகிறது.
இந்தப் பிரச்சினை அடிக்கடி வர என்ன காரணம்?இதற்கு என்ன சிகிச்சை எடுக்க வேண்டும்? போன்ற கேள்விக்கு பதில் வழங்குகிறார் சருமநல மருத்துவர் பூர்ணிமா.
சேற்றுப்புண் என்பது பூஞ்சையால் ஏற்படும் தொற்று. இந்தத் தொற்று பாதிக்கும்போது கால் விரல்களுக்கு இடையில் கொப்புளங்கள் வருவது, சிவந்த செதில்கள் உருவாவது, அரிப்பு, எரிச்சல் போன்றவை இருக்கும். ஈரப்பதம் அதிகமுள்ள சூழலிலும், ஈரமான இடங்களில் நின்று வேலை செய்வதாலும் இந்தப் பிரச்சினை தீவிரமாகும்.
அடிக்கடி சேற்றுப்புண் பிரச்சினை வருகிறது என்றால் முதல் வேலையாக ஈரப்பதம் அதிகமுள்ள இடங்களில் இருப்பதையும், தண்ணீரில் நின்றபடி வேலை செய்வதையும் தவிர்க்க வேண்டும். அது முடியாத பட்சத்தில் கைகளுக்கு கிளவுஸ், கால்களுக்கு இறப்பர் பூட்ஸ் போன்றவற்றை அணிந்துகொண்டு வேலை செய்ய வேண்டும்.
சேற்றுப்புண் பிரச்சினை வந்துவிட்டால் தானாக குணமாகும் என அலட்சியப்படுத்தாமல் சரும மருத்துவரின் ஆலோசனையின் பேரில், க்றீம், வாய்வழி எடுத்துக்கொள்ளக்கூடிய மாத்திரைகள் என முறையான சிகிச்சையை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
தொற்று முழுமையாக குணமாகும்வரை இந்த விடயங்களைப் பின்பற்ற வேண்டும். உங்களுடைய உடைகள், காலணிகள், socks போன்றவற்றை மற்றவருடன் பகிராமல் இருப்பதும் அவசியம்.
மேலும் இறுக்கமான காலணிகள் அணிவதையும் தவிர்க்க வேண்டும்.
வெறுங்கால்களுடன் நடப்பதையும் தவிர்க்கவும்.
இந்தப் பிரச்சினைக்கு சரும மருத்துவரை அணுகி முறையான சிகிச்சையை எடுத்துக்கொள்ள வேண்டும். சுய மருத்துவம் உதவாது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇