வற் வரி 18 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் சந்தையில் ஒரு கிலோகிராம் சிவப்பு சீனியின் விலை (09.01.2024) அன்று 415 ரூபாவாக அதிகரித்துள்ளதாக சீனி வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
பெல்வத்த மற்றும் செவனகல சீனி தொழிற்சாலைகளில் இருந்து மாத்திரம் சிவப்பு சீனி உற்பத்தி செய்யப்படுவதுடன், (09.01.2024) அன்று நடைபெற்ற டெண்டரின் பின்னர் ஒரு கிலோகிராம் சீனி 322 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது.
இதன் பிரகாரம் பதினெட்டு வீதம் (18%) வற் வரியும் 2.6% சமூக பாதுகாப்பு வரியும் சேர்த்து ஒரு கிலோகிராம் சீனியின் விலை 390 ரூபாவைத் தாண்டியுள்ளதாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டினர்.
அதனுடன் தமது இலாபத்தையும் சேர்த்த பின்னர் ஒரு கிலோ சிவப்பு சீனி 415 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை, இறக்குமதி செய்யப்பட்ட ஒரு கிலோகிராம் வெள்ளை சீனி சந்தையில் 265 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇