எகிப்தில் நடைபெற்ற உலக இளையோர் செஸ் போட்டியில் முதன்முறையாக நாட்டுக்காக தங்கப் பதக்கத்தை வென்று தந்த இலங்கையின் செஸ் வீராங்கனை ஒசினி தேவிந்தியா குணவர்தன நேற்று (29) காலை நாடு திரும்பினார். அக்டோபர் 14 முதல் 27 வரை நடைபெற்ற சாம்பியன்ஷிப்பில் 75 நாடுகளைச் சேர்ந்த செஸ் வல்லுநர்கள் போட்டியிட்டனர், கொழும்பில் உள்ள வைச்சர்லி சர்வதேச பாடசாலையின் தரம் 6 இல் பயிலும் மாணவி ஒசினி வரலாற்றில் இடம்பிடித்து, இலங்கைக்கு முதல் தங்கப் பதக்கத்தை பெற்றுக்கொடுத்துள்ளார்.. இலங்கை சதுரங்கச் சங்கத்தின் தலைவர் லக்ஷ்மன் விஜேசூரிய, வைசெர்லியின் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் குழுவினர் ஒசினிக்கு மாலை அணிவித்து வரவேற்றனர்.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇