பெரெண்டினாவின் மனிதாபிமான உதவி எனும் வேலைத்திட்டத்தின் கீழ் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நாசிவன்தீவில் 475 குடும்பங்களிற்கு வெள்ளநிவாரண உலர் உணவுப் பொதிகள் 16-01-2024 அன்று வழங்கப்பட்டன.
நாசிவன்தீவு கிராமசேவகர் அலுவலகத்தில் பெரெண்டினா நிறுவனத்தின் பிரதிப் பொது முகாமையாளர் பதுர்தீன் மொகமட் ரகீம் தலைமையில் வழங்கப்பட்ட இவ் உலர் உணவுப் பொதிகள் ஒவ்வொன்றும் சுமார் நான்காயிரம் ரூபாய் பெறுமதியானவை எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன், வாழைச்சேனை பிரதேச செயலாளர், உதவிப் பிரதேச செயலாளர், பெரண்டினா நிறுவனத்தின் மாவட்ட இணைப்பாளர் சௌந்தரராசா தினேஸ் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
அண்மையில் ஏற்பட்ட தொடர்மழை காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை ஏனையவர்களுக்கும் பகிர👇👇