வெற்றிடமான கிராம உத்தியோகத்தர் பதவிகளுக்காக பரீட்சை திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள பிரதேச செயலகப் பிரிவுகளின் பிரகாரம் நேர்முகப்பரீட்சைக்குத் தகுதி பெற்ற 4,232 பேரின் பட்டியல் 27.01.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.
உள்நாட்டலுவல்கள் அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.moha.gov.lk இல் இந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இப் பரீட்சை முடிவுகளின்படி 2002 கிராம அலுவலர் காலிப் பணியிடங்களுக்கு ஆள்சேர்ப்பு நடைபெறவுள்ளது.
வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், நேர்முகத் தேர்வுகள் விரைவில் நடத்தப்பட்டு, அவர்கள் அரச சேவைக்குள் உள்ளீர்க்கப்படுவார்கள் என உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த மேலும் தெரிவித்தார்.
பரீட்சை திணைக்களத்தினால் கிராம அலுவலர் பதவிக்கான பரீட்சை கடந்த டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி இடம்பெற்றது.
நேர்முகப்பரீட்சைக்குத் தகுதி பெற்றோரின் விபரத்திற்கு இங்கே க்ளிக் செய்யவும்
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇