அக்டோபர் 01 முதல் 05 வரை நாடளாவிய ரீதியில் வாழ்விட வாரம் அனுஸ்டிக்கப்படுவதை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு பிரதி அமைச்சர் ரீ.பீ.சரத் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் மாவட்ட முகாமையாளர் ரீ.சுபாஸ்கரனின் ஏற்பாட்டில் தெரிவு செய்யப்பட்ட 27 நபர்களுக்கான 4.05 மில்லியன் ரூபாய் பெறுதியான காசோலைகள் 02.10.2025 அன்று வழங்கி வைக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக்குழு தலைவருமான கந்தசாமி பிரபுவின் அழைப்பின் பெயரில் பிரதி அமைச்சர் மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டு பயனாளிகளுக்கான காசோலைகளை வழங்கிவைத்தார்.
ஒரு மில்லியன் ரூபாய் பெறுமதியான நிதியானது பயனாளிகளுக்கு ஐந்து கட்டமாக வழங்கப்படவுள்ளது.
இதன் போது கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் ஜனாதிபதியினால் வடக்கு கிழக்கு மாகாணத்தில் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கான நிதி ஒதுக்கீடுகளை செய்துள்ளார், மேலும் பிரதேச அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கு பிரஜாசக்தி திட்டத்தின் மூலம் பிரதேச செயலக அதிகாரிகளுடாக உங்களுக்குத் தேவையான அபிவிருத்தி திட்டங்களை நீங்களே தீர்மானித்து மேற்கொள்ள முடியும் என தெரிவித்தார்.
இந் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன், கிழக்கு மாகாண ஆளுநரின் பிரத்தியோக செயலாளர், உயர் அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
வீடு அற்றவர்களுக்கு அரசாங்கத்தினால் நிதி உதவி வழங்குவதுடன் பயனாளிகளின் நிதிப் பங்களிப்புடன் இவ் வீடுகள் பூர்த்தி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.













இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()









