“நாட்டின் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படும் வாழ்வின் சக்தி செயற்றிட்டத்தின் இரண்டாம் பாகத்தின் 33 வது நாள் நேற்று (11) இடம்பெற்றது .
LOLC நிறுவனமும் கம்மெத்தையும் இணைந்து முன்னெடுத்துவரும் வாழ்வின் சக்தி செயற்திட்டத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்திட்டத்தின் ஒரு அங்கமாக நேற்று மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் மஞ்சந்தொடுவாய் உசானியா வித்தியாலயம், முகைதீன் வித்தியாலயம், காங்கேயனோடை ஹிஸ்புழ்ழாஹ் வித்தியாலயம் மற்றும் ஆரையம்பதி கர்ப்பலா அல் மனார் வித்தியாலயம் ஆகிய நான்கு பாடசாலைகளிலும் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இதன்போது கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வுகளில் LOLC நிறுவனத்தின் உயரதிகாரிகளும், கம்மெத்த அமைப்பின் உயரதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇