ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் இலங்கையே மிகக்குறைந்த அளவிலான சம்பளத்தைக் கொண்ட நாடாக கண்டறியப்பட்டுள்ளது.
ஜப்பானிய நிறுவனங்கள் பல செயற்படும் ஆசிய பிராந்தியத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் இருந்து இந்த விடயம் கண்டறியப்பட்டுள்ளது.
இலங்கையின் உற்பத்தி முகாமையாளர்கள், உற்பத்தி சாராத முகாமையாளர்கள், உற்பத்தி பொறியியலாளர்கள், உற்பத்தி சாராத பணியாளர்கள் மற்றும் உற்பத்தித் தொழிலாளர்கள் ஆகியோருக்கான மாதாந்த அடிப்படை சம்பளம் ஆசிய பசுபிக் பிராந்தியத்தில் மிகக் குறைவாக காணப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த கணக்கெடுப்பு கடந்த 2023 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை நடத்தப்பட்டுள்ளது. ஆய்வின் படி, 32.3 வீத நிறுவனங்கள் மனிதவள சவால்களை எதிர்கொள்வதாகக் கூறியுள்ளன.
அத்துடன், இலங்கையில் பணியாளர்களை பணியமர்த்துவது இலகுவானது எனவும், நூற்றுக்கு 26.7 வீதம் சாத்தியப்பாடுகள் காணப்படுவதாகவும் கணக்கெடுப்பு சுட்டிக்காட்டுகிறது.
இதேவேளை தற்போது நாட்டில் நிலவும் நிதி நெருக்கடி காரணமாக பலர் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇