காத்தான்குடி பிரதேச செயலக நலன்புரி சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு நிருவாக கிராம உத்தியோகத்தரும், நலன்புரி சங்கத்தலைவருமான எம்.எம்.எம்.ஜரூப் தலைமையில் பாசிக்குடா தெங்குப் பயிர்ச்செய்கை சபை (Coconut Cultivation Board Farm, Pasikkudah) இல் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பிரதேச செயலாளரும், நலன்புரி சங்கத்தின் ஆலோசகருமான உ.உதயசிறிதர் அவர்களும், அதிதிகளாக உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா, கணக்காளர் கே.சித்திரா, நலன்புரி நிருவாக உறுப்பினர்கள், ஏனைய அங்கத்தவர்கள், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது பிரதேச செயலாளரின் சிறப்புரை இடம்பெற்றதுடன் 2023ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்கள், வேறு பிரதேச செயலகத்திற்கு இடமாற்றம் பெற்றுச் சென்ற உத்தியோகத்தர்கள், மற்றும் புலமைப் பரீட்சை, க.பொ.த சாதாரண தரம், உயர்தரம் ஆகிய பரீட்சையில் சிறப்பான அடைவுகளை பெற்றுக் கொண்ட உத்தியோகத்தர்களின் பிள்ளைகள், ஆகியோருக்கு கௌரவிப்பும், பணப்பரிசில்களும், நினைவுச் சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் உத்தியோகத்தர்களுக்கான மெச்சுரைகளும் பிரதேச செயலாளரினால் வழங்கி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து நலன்புரிச் சங்க உறுப்பினர்களினால் பாடல், கவிதை, நாடகம், பட்டிமன்றம், சங்கீதக் கதிரை, வில்லுப்பாட்டு போன்ற கலை நிகழ்வுகளும் இடம்பெற்றதுடன் நலன்புரிச் சங்க உறுப்பினர்களின் மழலைகளின் நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇