மட்டக்களப்பு அம்கோர் நிறுவனத்தின் நிதி அனுசரணையில் , Lift நிறுவனத்தின் ஏற்பாட்டில் முறையற்ற புலம்பெயர்வு தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு தாழங்குடா பிரதேச வேடர் குடியிருப்பு கிராம சேவகர் பிரிவில் 20.12.2023 அன்று இடம்பெற்றது.
இந் நிகழ்வில் அம்கோர் நிறுவன சிரேஷ்ட திட்ட முகாமையாளர் யோ . சிவயோகராஜன், கிராம சேவகர் டிலக்க்ஷன் , அபிவிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி .கரதூசானன் , Lift நிறுவனம் சார்பாக திட்ட முகாமையாளர் சுதர்ஷன் ,கள உத்தியோகத்தர் ரம்மியா மற்றும் வேடர் குடியிருப்பு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
நிகழ்வை அம்கோர் நிறுவனத்தின் கள உத்தியோகத்தர் தர்ஷன் ஆரம்பித்துவைத்திருந்தார்.
தொடர்ந்து பாதுகாப்பான புலம்பெயர்வு தொடர்பான விடயங்கள் LIFT நிறுவன திட்ட முகாமையாளர் சுதர்ஷன் வளவாளராக கலந்துகொன்டு அளிக்கையின் ஊடாக கலந்து கொண்டவர்களுக்கு விளக்கமளித்ததோடு விழிப்புணர்வு மிக்க விளையாட்டுக்களும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇