மக்களின் காணி உரிமையை உறுதிப்படுத்தும் வகையில் ‘உரித்து’ என்ற வேலைத்திட்டத்தின் கீழ் 10,000 காணி உறுதிப் பத்திரங்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
குறித்த காணி உறுதிப்பத்திரங்கள் தற்போது பிரதேச செயலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சுற்றுலா மற்றும் காணி அமைச்சின் செயலாளர் எச்.எம்.டி.பீ.ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தின் அதிகாரிகள், மாவட்டச் செயலாளர்கள், பிரதேச செயலாளர்களுடன் (30.01.2024) அன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘உரித்து’ வேலைத்திட்டத்தின் கீழ் முதற் கட்டமாக 10,000 காணி உறுதிப்பத்திரங்களை வழங்கி வைப்பதற்கான தேசிய நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் எதிர்வரும் 5ஆம் திகதி தம்புள்ளையில் இடம்பெறவுள்ளது.
‘உரித்து’ வேலைத்திட்டத்தின் கீழ் 20 இலட்சம் விவசாயக் குடும்பங்களுக்கு காணி உறுதிப் பத்திரங்களை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அத்துடன் அதற்காக பாதீட்டு திட்டத்திலும் 2 பில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி காணி கட்டளைச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட காணி உறுதிகள் அனைத்தும் முழு உரிமையுள்ள காணி உறுதிப் பத்திரங்களாக மாற்றப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇