பெரும்போக நெல் கொள்வனவிற்கான அனுமதியை நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு வழங்காதிருக்க நிதி அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதன்பிரகாரம் , சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் அரிசி மொத்த கொள்வனவாளர்கள் மூலம் நெல்லை கொள்வனவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரதேச செயலாளர்களின் கண்காணிப்பின் கீழ் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.
பெரும்போக நெல் கொள்வனவிற்காக சலுகை அடிப்படையிலான வட்டி வீதத்தில் கடன் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதன்கீழ் 9 பில்லியன் ரூபா கடன் தொகை வழங்கப்பட்டவுள்ளது.
கொள்வனவு செய்யப்படும் நெல்லை பிணையாக வைத்து சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் மற்றும் அரிசி மொத்த கொள்வனவாளர்கள் கடனை பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇