மண்முனை மேற்கு பிரதேசத்திற்கான ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தி தலைமையில் (31.01.2024) அன்று பிரதேச செயலக பிரதான மண்டபத்தில் இடம்பெற்றது.
இக் குழுக்கூட்டத்தில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன், பதவி நிலை உத்தியோகத்தர்கள், ஏனைய அலுவலக உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டனர்.
இதன் போது அத்தியாவசிய மணல் வீதிகளை கிரவல் வீதிகளாக மாற்றும் திட்டம் தொடர்பாகவும், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவு நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான விடயங்களும், திணைக்களங்கள் சார்ந்த குறை நிறை விடயங்கள் எதிர் கால திட்டங்கள் போன்றவை கலந்தாலோசிக்கப்பட்டன.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇