சர்வதேச கிரிக்கெட் பேரவையின் வருடாந்த பொதுக் கூட்டம் இந்த வருடம் இலங்கையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் 22 ஆம் திகதி வரை குறித்த கூட்டம் இடம்பெறவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பொதுச் சபைக் கூட்டத்தை இலங்கையில் நடத்துவது, நாட்டின் கிரிக்கெட் மற்றும் சுற்றுலாத்துறைக்கு நன்மை பயக்கும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇