இலங்கையின் 70 முதல் 80 சதவீதம் வரையான ஏற்றுமதிகளை, வரிகள் இல்லாமல் தமது சந்தைக்குள் அனுமதிக்க அமெரிக்கா முன்வந்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
பொருளாதார அபிவிருத்திக்கான இணை அமைச்சர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ இதனை தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில், இரண்டு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் வர்த்தக பேச்சுவார்த்தைகளின் போதே இச் சலுகை கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இப் பொருட்களில் ஆடைகள் மற்றும் விவசாயத் துறை தொடர்பான 42 பொருட்களும் அடங்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இந் நிலையில் விவாதங்கள் இன்னும் நடந்து கொண்டிருப்பதால், வேறு விடயங்களை பகிரங்கமாக வெளியிட முடியாது என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










