நவீன மயப்படுத்தப்பட்ட இலங்கைப் பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

இலங்கைப் பாராளுமன்றத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் கடந்த 19 வருடங்களாக செயற்பட்டுவரும் நிலையில், இதில் புதிய மாற்றங்கள் செய்யப்பட்டு நவீன மயப்படுத்தப்பட்ட இணையத்தளத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் 27.11.2025 அன்று நடைபெற்றது.

இதன் போது, பிரதி சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி, பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

குறித்த நிகழ்வின் போது, 2006 ஆம் ஆண்டு இலங்கைப் பாராளுமன்றத்திற்கான இணையத்தளம் உருவாக்கப்பட்டது.

இதன் பின்னரான காலப்பகுதியில் இரண்டு தடவைகள் புதுப்பிக்கப்பட்ட இந்த இணையத்தளம் தற்பொழுது மூன்றாவது தடவையும் புதுப்பிக்கப்பட்டு அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

சபாநாயர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்ன அறிவுறுத்தலில், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்ட செயலாளர் குழுவின் வழிகாட்டலில், தேசிய ஜனநாயக நிறுவகத்தின் (NDI) முழுமையான அனுசரணையுடன், பாராளுமன்றத்தின் தகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களம் மற்றும் டெக்கீஸ் (தனியார்) நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் புதுப்பிக்கப்பட்ட இணையத்தளம் வடிவமைக்கப்பட்டது.

புதுப்பிக்கப்பட்ட பாராளுமன்றத்தின் இணையத்தளம் மேம்படுத்தப்பட்ட அணுகல் மற்றும் பல புதிய அம்சங்கள் பலவற்றை உள்ளடக்கியதாகவும், நவீன தேவைகளை இலகுவாகப் பூர்த்திசெய்யக் கூடிய வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இணையதளத்தில் உள்ள ” My Parliament ” portal ஆனது ஒவ்வொரு பிரஜையும் பாராளுமன்றத்துடனும், பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் நேரடியாக இணைவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

மேலும் இணையதளத்தில் பதிவு செய்வதன் மூலம் பொதுமக்கள் பாராளுமன்றத்தினால் வழங்கப்படும் சேவைகளை எளிதாக அணுகும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

மேலும், பாராளுமன்றத்துடன் இணைந்து பணியாற்றும் அரசாங்கப் பணியாளர்கள் இந்தப் பதிவை மேற்கொண்டு தமது நடவடிக்கைகளை எளிதாக மேற்கொள்ளும் வாய்ப்பைப் பெறுவர்.

பாராளுமன்றத்தின் இணையத்தளம் அரசாங்கத் துறையில் விருதுகள் பலவற்றைப் பெற்றுக் கொண்ட இணையத்தளமாக விளங்குகிறது.

பல ஆண்டுகளாக தேசிய அளவிளான போட்டிகளில் ‘சிறந்த அரசாங்க இணையத்தளம்’ என்ற விருதையும், ‘சிறந்த பன்மொழி இணையத்தளம்’ என்ற விருதையும் பெற்றுள்ளது. சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளைக் கொண்ட பாராளுமன்ற இணையத்தளத்தில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்களும் திட்டமிடப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் பாராளுமன்றத்தின் தகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களத்தின் பணிப்பாளர் என்.பி.யூ.நவகமுவ உள்ளிட்ட அத்திணைக்களத்தின் அதிகாரிகள், டெக்கீக்ஸ் (தனியார் ) நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கசுன் கமகே உள்ளிட்ட அந்நிறுவனத்தின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects