இலங்கையின் 76வது தேசிய சுதந்திர தின விழாவை முன்னிட்டு மட்டக்களப்பு திராய்மடுவில் அமைந்துள்ள புதிய மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜெஸ்டினா முரளிதரன் தலைமையில் (02.02.2024) அன்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்ஷினி ஸ்ரீகாந்த், மாவட்ட செயலக பிரதம கணக்காளர் ஏ.எம் பஸிர், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், உயர் அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
“புதிய நாட்டைக் கட்டியெழுப்புவோம்” எனும் தொனிப்பொருளில் 76ஆவது தேசிய சுதந்திர தினம் கொண்டாடப்படவுள்ள நிலையில் மரக்கன்றுகளை நடும் செயற்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்திலும் நடைமுறைப்படுத்தப்பட்டு இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇