உலக உணவு திட்டத்தின் மூலம் ஐம்பது இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் வழங்கிவைப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

உலக உணவு திட்டத்தின் மூலம் ஐம்பது இலட்சம் பெறுமதியான உபகரணங்கள் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவின் பயனாளிகளுக்கு வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

வர்த்தக இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குற்பட்ட 17 ஆரம்ப பாடசாலைக்கான உணவு வழங்குனர்களுக்கான உபகரணங்கள் மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக வளாகத்தில் வைத்து (03.02.2024) அன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் மாவட்ட செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.ஜதிஸ்குமார், வைத்தியர்கள், திணைக்களங்கள் சார் உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

இதன் போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜெஸ்டினா முரளிதரன், மண்முனை தென்மேற்கு பிரதேச செயலாளர் எஸ்.சுதாகரன் உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்துகொண்டு பயனாளிகளுக்கான உபகரணங்களையும் வழங்கி வைத்துள்ளனர்.

உலக உணவுத்திட்டத்தின் மூலம் ஆரம்ப பாடசாலை மாணவர்கள் 5013 பேருக்கு போசாக்கான சமைத்த உணவுகளை வழங்குனர்களை ஊக்குவிக்கும் செயற்திட்டமாக இது அமைந்திருந்தது.

அத்தோடு 3 நபர்களுக்கு சுமார் ஐம்பது இலட்சம் பெறுமதியான வீட்டுத் தோட்ட விவசாய உற்பத்தி செய்தற்கான விதை பொருட்கள் மற்றும் கோழி வளர்ப்பிற்கான உபகரணங்கள், நீர்த்தாங்கிகள், முற்கம்பிகள், நீர்ப்பம்பிகள் என பல பொருட்கள் இதன் போது வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects