ஏறாவூர் பற்று செங்கலடி பிரதேச செயலக கிராம அபிவிருத்தி பிரிவினரால் ஐயங்கேணி விபுலானந்தபுரம் கிராம அபிவிருத்திச் சங்க அங்கத்துவர்களில் தெரிவு செய்யப்பட்ட 67 பயனாளிகளுக்கு வாழ்வாதார கடனாக சங்க நிதியினூடாக ரூபா 1,462,500.00 (பதினான்கு இலட்சத்து அறுபத்திரெண்டாயிரத்து ஐநூறு) சுழலும் கடன் திட்டத்தின் கீழ் வழங்கிவைக்கப்பட்டது.
இந் நிகழ்வானது பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரமின் அனுமதியின் கீழ் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.அகிலேஸ்வரன் மேற்பார்வையில் கிராம அபிவிருத்தி திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.எஸ்.ஸப்றி ஹசனினால் வழங்கிவைக்கப்பட்டுள்ளன.
நிகழ்வில் பிரிவிற்கான கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் எனபலரும் கலந்துகொண்டு கடனுதவிகளை வழங்கிவைத்தனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇