இலங்கையின் ஆடை ஏற்றுமதி 2024 ஆம் ஆண்டில் 5% அதிகரிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2024 ஆம் ஆண்டில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி 5% அதிகரித்து 4.76 பில்லியன் டொலர்களாகப் பதிவாகியுள்ளதாக ஒன்றிணைந்த ஆடை கைத்தொழிலாளர் மன்றம் தெரிவித்துள்ளது.

அதன்படி, அமெரிக்காவுக்கான ஏற்றுமதி 1.9 பில்லியன் டொலராகவும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கான ஏற்றுமதி 1.4 பில்லியன் டொலராகவும், பிரித்தானியாவுக்கான ஏற்றுமதி 675 மில்லியன் டொலராகவும் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், ஏனைய நாடுகளுக்கான ஆடை ஏற்றுமதிகளும் 2024 ஆம் ஆண்டில் 10.13 சதவீதம் அதிகரித்து 778.4 மில்லியன் டொலர்களாகவும் பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும், ஆடைத் துறையின் சிறந்த ஆண்டாகக் கருதப்படும் 2022 ஐ விடவும் 2024 ஆம் ஆண்டில் ஏற்றுமதி செயல்திறன் பின்தங்கியுள்ளதாக ஒன்றிணைந்த ஆடை கைத்தொழிலாளர் மன்றம் குறிப்பிட்டுள்ளது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects