இந்தியாவின் UPI என்ற ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறைமை 12.02.2024 அன்று முதல் இலங்கையில் அறிமுகப்படுத்தப்படும் என வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணையவழி முறையின் ஊடாக கொழும்பில் இதனை அறிமுகப்படுத்தவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இந்திய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி இதனைத் தெரிவித்துள்ளார்.
UPI என்ற ஒருங்கிணைந்த கட்டணம் செலுத்தும் முறைமை 2016 ஆம் ஆண்டில் இந்திய தேசிய கொடுப்பனவு கூட்டுத்தாபனத்தினால் உடனடி பணம் செலுத்தும் முறைமையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
இது பல வங்கிக் கணக்குகளை, ஒரே கைபேசி செயலி, ஊடாக இணைக்கும் அமைப்பாகும், இந்த கட்டண முறையானது கைபேசிகள் மூலம் வங்கிகளுக்கு இடையேயான மற்றும் தனிப்பட்ட வர்த்தக பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறது.
இதன்மூலம் இலங்கையின் சுற்றுலா வர்த்தகம் மேம்படும் எனவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇