க.பொ.த உயர்தர பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் மற்றும் செயலமர்வுகள் நாளை (19.11.2024) நள்ளிரவுக்கு முன்னர் நிறைவு செய்யப்படவேண்டுமேன பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த ஆலோசனைகளை பின்பற்றாதவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதனிடையே பரீட்சை காலப்பகுதியில் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த காலங்களில் பரீட்சைகள் தொடர்பாக ஏற்பட்ட சிக்கல்களை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சை திணைக்கள அதிகாரிகளுக்கு மேலதிகமாக மாகாண மற்றும் பிராந்திய அலுவலகங்களின் அதிகாரிகளும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
உயர்தர பரீட்சை எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் டிசம்பர் 20 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன் 2,312 பரீட்சை நிலையங்களுடன் 319 தொடர்பாடல் மையங்களும் பரீட்சைக்காக ஸ்தாபிக்கப்படவுள்ளன.
இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்கு 333,185 மாணவர்கள் தோற்றவுள்ளனர்.
அவர்களுள் 253,390 பாடசாலை பரீட்ச்சார்த்திகளும், 79,795 தனியார் பரீட்ச்சார்த்திகளும் பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇