சிறுவர்களுக்கு ராகம போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் கல்லீரல் மாற்று சத்திரசிகிச்சை மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் செவிப்புலன் சத்திரசிகிச்சை என்பவற்றுக்காக ஜனாதிபதி நிதியத்திலிருந்து இருந்து நிதியுதவி வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
அதன்படி, ராகம போதனா வைத்தியசாலையில் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சைக்கு முன்னும் அதன் பின்னரான பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைக்காக இந்த நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
அதன்படி, உரிய நிபந்தனைகளை பூர்த்தி செய்பவர்களுக்காக, குறித்த சத்திர சிகிச்சைக்கு ஜனவரி முதலாம் திகதி முதல் ஜனாதிபதி நிதியத்திலிருந்து 10 இலட்சம் ரூபா வழங்கப்படுகிறது.
அதேநேரம், பிறக்கும்போதே செவிப்புலன் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு, பிறந்து 2 வருடங்களின் பின்னர் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்காக செவிப்புலன் சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
தற்போது இந்த அறுவை சிகிச்சை ஒரு சில அரசாங்க மருத்துவமனைகளில் மட்டுமே செய்யப்படுவதால், பாதிக்கப்பட்ட சிறுவர்கள் அரச மருத்துவமனைகளில் இதற்காக காத்திருப்பு பட்டியலில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் இந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்படுவதோடு, இதனூடாக சுமார் 3 முதல் 4 மில்லியன் ரூபா வரையான பெறுமதி கொண்ட கருவிகள் பொறுத்தப்படுகின்றன.
சுகாதார அமைச்சினால் இந்த கருவி இலவசமாக வழங்கப்படுகின்ற போதிலும் சத்திரசிகிச்சைக்கு அதிக செலவு ஏற்படுகிறது.
எனவே, சத்திர சிகிச்சைக்கான செலவாக ஆறு லட்சம் ரூபாவை ஜனாதிபதி நிதியத்திலிருந்து வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇