மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சுய தொழில் முயற்சியாளர்களின் உற்பத்திப் பொருட்களிற்கு மட்டக்களப்பிலுள்ள அம்மா சந்தைப்படுத்தல் நிறுவனம் சந்தை வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.
சுய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதன் மூலம் உள்ளூர் உற்பத்திகளை அதிகரிக்கச் செய்வது மட்டுமல்லாது நாட்டின் பொருளாதார மேம்பாட்டிற்கும் வழி வகுக்கும் எனும் தொனிப்பொருளில் உள்ளூர் உற்பத்தியாளர்களிற்கு சந்தை வாய்ப்பினை குறித்த நிறுவனத்தினர் 20.03.2024 அன்று முதல் ஏற்படுத்தி கொடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளதுடன், நிறுவனத்தின் முதலாவது கிளையினை கல்லடி பழைய பாலத்திற்கு அருகாமையில் உள்ள Bridge Market இல் திறந்துள்ளனர்.
மட்டக்களப்பில் அதிகமாக சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் இடமாக திகழ்கின்ற கல்லடி Bridge Market இல் இவர்களுக்கான சந்தை வாய்ப்பை அம்மா சந்தைப்படுத்தல் நிறுவனம் ஏற்படுத்தி கொடுப்பதனால் பல சுய தொழில் முயற்சியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த முடிவதாகவும், இவ்வாறான சந்தை வாய்ப்பை மேலும் பல இடங்களில் நிறுவவுள்ளதுடன், மட்டக்களப்பில் இருந்து உள்ளூர் உற்பத்திகளை வெளியூர் மற்றும் வெளி நாடுகளுக்கு சந்தைப்படுத்துவதுடன் ஏற்றுமதி செய்வதற்கும் நிறுவனத்தினர் முன்னின்று உழைக்கவுள்ளதாக நிறுவுனர் தெரிவித்தார்.
அம்மா சந்தைப்படுத்தல் நிறுவனம் என்ற பெயரில் சுய தொழில் முயற்சியாளர்களுக்கு உதவும் நோக்கில் திறக்கப்பட்டுள்ள முதலாவது கிளை மட்டக்களப்பு பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ.சுகுணனினால் திறந்து வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇