2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்-சிங்கள சித்திரைப் புத்தாண்டு கலாசார நிகழ்வுகள் மட்டக்களப்பு சிறைக்கைதிகள் நலன்புரிச் சங்கத்தின் அனுசரணையிலும், சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டிலும், சிறைச்சாலை அத்தியட்சகர் திரு. நல்லையா பிரபாகரனின் தலைமையிலும் 21-04-2024 அன்று மட்டக்களப்பு சிறைச்சாலையில் நடைபெற்றன.
தமிழ்-சிங்கள புத்தாண்டு பாரம்பரிய விளையாட்டுக்களான முட்டி உடைத்தல், பலூன் ஊதி உடைத்தல், கிடுகு பின்னுதல், தேங்காய் துருவுதல், ஊசியில் நூல் கோர்த்தல், யானைக்குக் கண் வைத்தல், சூப்பி போத்தலில் குளிர் பானம் அருந்துதல், விநோத உடைப் போட்டி உட்பட பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் ஆண் – பெண் எனப் பெருமளவான கைதிகள் பங்குபற்றி பரிசில்களையும் பெற்றனர்.
சிறைக்கைதிகள் நலன்புரிச் சங்கத்தின் தலைவர் திரு. எபநேசர் தர்ஷன் உட்பட சங்கத்தின் பெருமளவான உறுப்பினர்களும், சிறைச்சாலை உத்தியோகத்தர்களும் இணைந்து விளையாட்டுப் போட்டிகளையும், நிகழ்வுகளையும் நெறிப்படுத்தி இருந்தனர்.
மட்டக்களப்பு சிறைக்கைதிகள் நலன்புரிச் சங்கத்தினால் சிறக்கைதிகளின் உடல் – உள மேம்பாட்டிற்கான பல்வேறு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇