மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்புப் பரவலைக் கட்டுப்படுத்துதல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஆ. நவேஸ்வரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 27.12.2023 அன்று இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் மாவட்ட பிராந்திய பிரதி சுகாதாரப் பணிப்பாளர் வைத்தியர் ஆர். நவலோஜிதன் டெங்குப் பரவலைக் கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களை வழங்கினார்.
இதன்போது நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நுளம்பு பரவக் கூடிய இடங்களை அடையாளம் காணுதல், அவற்றை துப்பரவு செய்து நிலைபேறானதாக தொடர்ந்து அவ்விடங்களை நுளம்புப் பரவலில் இருந்து பாதுகாத்தல், அதற்காக எவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பன தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது. அத்துடன் பிராந்திய தொற்றுநோயியலாளர் வைத்தியர் கார்த்திகா டெங்கு நுளம்புப் பரவலில் மாவட்டத்தின் நிலைப்பாடு தொடர்பாகத் தெளிவுபடுத்தினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் டிசம்பர் மாதத்தில் குறிப்பாக ஏறாவூர் நகர் மற்றும் பற்றுப் பிரதேச செயலாளர் பிரிவு டெங்குத் தாக்கம் அதிகமாகக் காணப்படுவதுடன் மட்டக்களப்பு நகர், களுவாஞ்சிகுடி மற்றும் வாழைச்சேனை பொதுச் சுகாதார வைத்தியர் பிரிவுகளிலும் காத்தான்குடியிலும் இதன் தாக்கம் தொடர்ந்தும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது .
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர….👇👇