அதிகரித்து வரும் அரிசி விலையை நிவர்த்தி செய்வதற்கும், கீரி சம்பா வகையை விரைவாகக் கிடைக்கச் செய்வதற்கும், தனியார் துறைக்கு இறக்குமதிக்கான அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
அரசினால் மேற்கொள்ளப்பட்டு வரும் கொள்வனவு செயற்பாடுகள் தாமதமடைவதால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிறி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.
அரிசியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், கீரி சம்பா இறக்குமதிக்கு அண்மையில் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அதன் கீழ், 50 ஆயிரம் மெட்ரிக் டன் சம்பா அரிசியை இறக்குமதி செய்வதற்கான கொள்முதல் பணியை அரச வர்த்தக கூட்டுத்தாபனம் ஆரம்பித்துள்ளது.
எனினும், குறித்த செயல்முறை இதுவரையில் நிறைவடையவில்லை.
இந்தநிலையில், சம்பாவை தனியாருக்கு இறக்குமதி செய்ய அனுமதி கிடைத்துள்ளதால் குறித்த அரிசி இறக்குமதி உடனடியாக நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் என வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇