அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகமொன்றில் பூனைக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்ட செய்தி தற்போது வைரலாகியுள்ளது.
அமெரிக்காவிலுள்ள வெர்மான்ட் மாநில பல்கலைக்கழக வளாகத்தில் மேக்ஸ் என்ற பூனை வசித்து வருகிறது.
4 ஆண்டுகளாக பல்கலைக்கழகத்தையே சுற்றிவரும் குறித்த பூனை, மாணவர்களிடமும் நட்புடன் பழகும் தன்மையைக் கொண்டுள்ளது.
அத்துடன் குறித்த பூனை பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள குப்பைத் தொட்டிகளை பொறுப்புடன் பராமரிப்பதாகவும் கூறப்படுகின்றது.
இந்த நிலையில் மேக்ஸ் பூனையின் சேவையைப் பாராட்டி குறித்த பல்கலைக்கழகம், கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி உள்ளது.
இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇