பிறப்புச் சான்றிதழ் இல்லாத குழந்தைகளுக்கான பிறப்புச் சான்றிதழ் வழங்கும் வேலைத்திட்டம் நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடளாவிய ரீதியில் பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத குழந்தைகளை இனங்கண்டு அவர்களுக்கு நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம் மற்றும் பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் சான்றிதழ்களை வழங்குவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.
பிறப்புச் சான்றிதழ் இல்லாமல் கணிசமான எண்ணிக்கையிலான குழந்தைகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதேச செயலக மட்டத்தில் கடமையாற்றும் சிறுவர் உரிமைகள் ஊக்குவிப்பு உத்தியோகத்தர்களினால் இந்த மாதம் முழுவதும் இச்செயற்பாடு மேற்கொள்ளப்படும்.
இந்த வேலைத்திட்டத்தின் ஊடாக வழங்கப்படும் பிறப்புச் சான்றிதழ்களுக்கு ஒக்டோபர் மாதம் முழுவதும் கட்டணம் அறவிடப்பட மாட்டாது என அரசாங்க தகவல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇