தற்போது பயன்பாட்டிலுள்ள செமிகண்டக்டர் சிப் (semiconductor chips) களுக்குப் பதிலாக QR குறியீடுகளுடன் டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரங்களை வழங்க மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அத்துடன் QR குறியீடுகளை வாசிக்க தனி தொலைபேசி செயலிகள் பயன்படுத்தப்படும் எனவும் இதனை மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்துடன் இணைந்து பொலிஸாரும் முன்னெடுப்பர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து சிப் ரீடிங் யூனிட்களை இறக்குமதி செய்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் அல்லது ஸ்மார்ட் சாரதி அனுமதி பத்திரங்களை அறிமுகப்படுத்தும் திட்டத்துக்கு கடந்த ஒக்டோபர் மாதம் அமைச்சரவை அனுமதி கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇