இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2024 பெப்ரவரி13ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

2024 பெப்ரவரி13ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை,மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

வடக்கு மாகாணத்திலும் அனுராதபுரம் மாவட்டத்திலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மலைநாட்டின் கிழக்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, தென், வடமேல், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மழை நிலைமை:

திருகோணமலையிலிருந்து பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கொழும்பிலிருந்து காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காற்று :

நாட்டைச் சூழவுள்ளகடற்பரப்புகளில்காற்றானது வடகிழக்குதிசையிலிருந்து வீசக்கூடுவதுடன், காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டைஊடாகபொத்துவில்வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்டகடற்பரப்புகளிலும்கொழும்பிலிருந்து புத்தளம் ஊடாக காங்கேசந்துறை வரையானகரையோரத்திற்கு அப்பாற்பட்டகடற்பரப்புகளிலும்காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 55-60கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடிய சாத்தியம்காணப்படுகின்றது.

கடல் நிலை:

காலியிலிருந்துஹம்பாந்தோட்டைஊடாகபொத்துவில்வரையானகரையோரத்திற்கு அப்பாற்பட்டகடற்பரப்புகளும் கொழும்பிலிருந்து புத்தளம்ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்டகடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள்மிதமான அலையுடன்காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது,

(வளிமண்டலவியல் திணைக்களம்)

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects