ஜனாதிபதி தேர்தலுக்கு 11 பில்லியன் ரூபா ஒதுக்கீடு !

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இம்மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள 2024ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் ஊடாக தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு 11 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு ரீதியாக அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்பட வேண்டும்.

2024 ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின்படி, அரசாங்கச் செலவு 3,860 பில்லியன் ரூபாவாகும். இது 2023 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 203 பில்லியன் ரூபா அதிகரிப்பாகும். 2023 ஆம் ஆண்டில் மதிப்பிடப்பட்ட செலவு 3,657 பில்லியன் ரூபாவாகும்.

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2024 இல், பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கு மிகப் பெரிய தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது 886 பில்லியன்.

இரண்டாவது பெரிய தொகை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகை 723 பில்லியன்.

மூன்றாவது அதிக தொகை பாதுகாப்பு அமைச்சகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தொகை 322 பில்லியன் ஆகும்.

Loading

Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects