கச்சத்தீவு வருடாந்த திருவிழாவில் பங்குகொள்ளும் பக்தர்களுக்காக இம்மாதம் 23ஆம் திகதி காலை 05.00 மணிமுதல் நண்பகல் 12.00 மணிவரை மட்டுமே யாழ்ப்பாணம், குறிக்காட்டுவான் பகுதியிலிருந்து படகுகள் இயக்கப்படும் என யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.
கச்சத்தீவு செல்ல யாழ்ப்பாணம் , யாழ் பிரதான பேருந்து நிலையத்தில் இருந்து குறிகட்டுவான் செல்ல இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான மற்றும் தனியார் பேருந்துகள் 15 நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கச்சத் தீவு திருவிழா எதிர்வரும் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது. இதில் பங்குகொள்ளும் பக்தர்களின் எண்ணிக்கை 8000 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அதாவது இலங்கையிலிருந்து 4000 பக்தர்கள் மற்றும் 4000 இந்திய பக்தர்கள் கலந்து கொள்வார்கள் .
மேலும் அன்னதானம் வழங்கப்படாது என்பதால் பக்தர்கள் தேவையான உணவு பொருட்களை எடுத்து வருமாறும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. மற்றும் மதுபானம் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
கச்சத்தீவு திருவிழாவிற்கு பின், அதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவரும் பெப்ரவரி 24-ம் திகதி பகல் 12.00 மணிக்குள் கச்சத் தீவை விட்டு வெளியேற வேண்டும் என ஆளுநரின் அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇