சுகாதார சேவையுடன் தொடர்புடைய பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய, ஜனாதிபதி செயலாளரினால் இந்த அதிவிசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அதற்கமைய, வைத்தியசாலைகள், சிகிச்சை நிலையங்கள், மருந்தகங்கள் மற்றும் அதனையொத்த பிற நிறுவனங்களில் நோயாளிகளின் பராமரிப்பு மற்றும் வரவேற்பு, உணவு மற்றும் சிகிச்சை தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇