இன்றைய (10.10.2025) அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு ஏற்ப அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்துவதற்கும் திறம்படச் செய்வதற்கும் அமைச்சரவையில் மாற்றம் மேற்கொள்ள அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
அதனடிப்படையில் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்னிலையில் சில புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்றனர்.
பதவியேற்ற புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பின்வருமாறு….
அமைச்சரவை அமைச்சர்கள்
பிமல் நிரோஷன் ரத்நாயக்க – போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர்
அனுர கருணாதிலக – துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர்
வைத்தியர் எச்.எம். சுசில் ரணசிங்க – வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர்
பிரதி அமைச்சர்கள்
கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ – நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர்
டி.பி. சரத் – வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் பிரதி அமைச்சர்
எம்.எம். மொஹமட் முனீர் – சமய மற்றும் கலாச்சார விவகார பிரதி அமைச்சர்
எரங்க குணசேகர – நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர்
வைத்தியர் முதித ஹங்சக விஜயமுனி – சுகாதார பிரதி அமைச்சர்
அரவிந்த செனரத் விதாரண – காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர்
எச்.எம். தினிது சமன் குமார – இளைஞர் விவகார பிரதி அமைச்சர்


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










