Govpay மூலம் வாகன அபராதங்களை நிகழ்நிலை முறையில் செலுத்துவதில் பெற்ற பெருமையான பங்களிப்பிற்கு, LankaPay Technnovation – 2026 விருது விழாவில் சிறந்த அரச நிறுவனம் விருது இலங்கை பொலிஸாருக்கு வழங்கப்பட்டது.
இலங்கை மத்திய வங்கி வழிகாட்டுதலின் கீழ் புதிய நவீன டிஜிட்டல் தேசிய கட்டணப் பிணையத்தை (Govpay) உருவாக்கி செயல்படுத்தும் LankaPay நிறுவனம், தனது சேவையை மக்களிடையே சிறப்பாக அறிமுகப்படுத்தி, நாட்டை டிஜிட்டல் மாற்றக் காலத்திற்குள் அழைத்து செல்ல அர்ப்பணித்துள்ள நிறுவனங்களை மதிப்பிடும் வகையில் LankaPay Technnovation – 2026 விருது விழா இன்று (25.03.2026) கொழும்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில், Govpay டிஜிட்டல் கட்டண சேவையை தரமான முறையில் பயன்படுத்தி மக்களிடையே அறிமுகப்படுத்துவதில் அர்ப்பணிக்கப்பட்ட சிறந்த அரசு நிறுவனமாக இலங்கை பொலிஸ் தேர்வு செய்யப்பட்டு அதற்கான விருதும் வழங்கப்பட்டது.
டிஜிட்டல் கட்டண அமைப்பை மக்களிடையே அறிமுகப்படுத்தி, பொதுமக்களுக்கு வசதிகளை ஏற்படுத்துவதில் வழங்கிய பங்களிப்பை மதித்து, விழாவில் பங்கேற்ற பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரயந்த வீரசூரிய, குற்றம் மற்றும் போக்குவரத்துக்கு பொறுப்பான சிரேஷ்டப் பிரதி பொலிஸ்மா அதிபர் ரண்மல் கொடித்துவக்கு , போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்பு பிராந்தியத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் W.P.J. சேனாதீர , மற்றும் பொலிஸ் தகவல் தொழில்நுட்ப பிரிவின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் லக்மால் ஆகியோர் இந் நிகழ்வின் மூலம் பாராட்டப்பட்டனர்.
இந்த நிகழ்வில், டிஜிட்டல் பொருளாதாரம் பற்றிய பிரதி அமைச்சர் ஏரங்க வீரரத்ன, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி P. நந்தலால் வீரசிங்க, மற்றும் ஜனாதிபதியின் டிஜிட்டல் பொருளாதார பிரதான ஆலோசகர்கலாநிதி ஹான்ஸ் விஜேசூரிய ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
மேலும், டிஜிட்டல் முறைகளை பயன்படுத்துவதில் நாட்டில் முன்னணி தனியார் நிறுவனங்களின் தலைவர்கள் விருதுகளை பெற்றுக் கொண்டவர்களும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.








இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










