வாழைச்சேனை விவேகானந்தா சிறுமிகள் இல்லத்திற்கு மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகத்தினால் புதிய சுகாதார வசதிகள் கையளிப்பு!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் சமூக சேவைத் திட்டத்தின் ஒரு பகுதியாக வாழைச்சேனை விவேகானந்தா சிறுமிகள் இல்லத்திற்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ஏழு மில்லியன் ரூபாய் பெறுமதியான சுகாதார வசதிகள் 10.05.2026 அன்று கையளிக்கப்பட்டன.

எஸ்.சுரேஷ்குமார் மற்றும் குடும்பத்தினரின் பூரண நிதி அனுசரணையுடன் செய்து முடிக்கப்பட்ட இத்திட்டம் லயன்ஸ் கழகத்தின் தலைவர் லயன் எஸ்.மனோகரன் MJF/MAF தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக லயன்ஸ் மாவட்டம் 306 D10 மாவட்ட ஆளுநர் லயன் கே. லோகேந்திரன் PMJF/PMAF கலந்துகொண்டதுடன், முதல் பெண்மணி லயன் லோஜிதா லோகேந்திரனும் வருகை தந்திருந்தார்.

கௌரவ அதிதிகளாக லெப்டினன்ட் கேர்னல் ரோஹண விமலசேன, மேஜர் சேமசிங்க அழகக்கோன் ஆகியோரும் கலந்துகொண்டதுடன், சிறப்பு அதிதிகளாக விவேகானந்தா சிறுமிகள் இல்லத்தின் தலைவர் எஸ்.சந்திரகுமார், செயலாளர் லயன் பி.ஜி. டேவிட் MAF, பொருளாளர் லயன் எம்.விதுசாகன் MJF/MAF, திட்டத் தலைவரும், மாவட்ட ஆளுநரும், பிரதம நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், துணை ஆளுநர்சபை பொருளாளருமான லயன் பி. சடாட்சரராஜா MJF/PMAF, இரண்டாம் துணை ஆளுநர் Dr. T. ஆதித்தன் PMJF/PMAF, GMST ஒருங்கிணைப்பாளர் லயன் என்.தர்ஷன் PMAF, ஒருங்கிணைப்பாளர் லயன் ஜி. முரளிதரன் MAF (GMCT), வலயத் தலைவர் லயன் கு.சுபாஷ்கரன் MAF உட்பட மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழக உறுப்பினர்களும் கலந்துகொண்டனர்.

இத்திட்டம், தேவையுள்ள சிறுவர்கள் மற்றும் சிறுமிகளின் நலன், சுகாதாரம் மற்றும் வாழ்வாதார மேம்பாட்டிற்காக மனிதநேய சேவையை நோக்காகக்கொண்டு செயற்பட்டு வரும் மட்டக்களப்பு பாடுமீன் லயன்ஸ் கழகத்தின் சமூகப் பொறுப்புணர்வை வெளிப்படுத்துவதாக இதன்போது தெரிவிக்கப்பட்டது.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects