இங்கிலாந்தில் 1,700 ஆண்டுகள் பழமையான கோழி முட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தின் அய்ல்ஸ்பரி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின் போது இந்த முட்டை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், குறித்த முட்டையில் உள்ள மஞ்சள் கருவும் வெள்ளை கருவும் எந்தவித சேதமும் இன்றி இயற்கையான வடிவில் இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் 1,700 ஆண்டுகளுக்குப் பிறகும் மனித தலையீடு இல்லாமல் இயற்கையாகப் பாதுகாக்கப்பட்ட உலகின் ஒரே முட்டை இதுவென ஒக்ஸ்போர்ட் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் எட்வர்ட் வுல்ஃப் குறிப்பிட்டுள்ளார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇