இம் மாதம் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் பாடசாலைகளிலுள்ள அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஏனைய ஊழியர்கள் அனைவரும் இம் மாதம் 15 ஆம் திகதி சேவைக்கு சமூகமளிக்க வேண்டும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவெவ தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் 09.12.2025 அன்று கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த நிலையில், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளிலுள்ள மாணவர்கள் மற்றும் கல்விசாரா ஊழியர்களின் சீருடை விடயத்தில், தளர்வான கொள்கை பின்பற்றப்படும் என அவர் தெரிவித்தார்.
மேலும், 2025 ஆம் ஆண்டின் மூன்றாம் தவணைக் காலத்தின் இரண்டாம் கட்டம் 2025.12.16 ஆம் திகதி முதல் 2025.12.22 ஆம் திகதி வரையும் , கிறிஸ்துமஸ் விடுமுறைக்குப் பின்பு மீண்டும் 2025.12.29 ஆம் திகதி முதல் 2025.12.31 ஆம் திகதி வரையும் நடைபெறும் என்றதோடு, முஸ்லிம் பாடசாலைகள் 2026.01.02 ஆம் திகதி வரை நடைபெறும் என்றும் தெரிவித்தார்.


இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










