இந்த ஆண்டுக்கான கொரிய மொழி பரீட்சை தொடர்பில் தற்போது சமூக வலைத்தளங்களில் பரவிவரும் விண்ணப்படிவம் போலியானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இந்த விடயத்தை அறிவித்துள்ளது.
கொரிய அரசாங்கத்தினால் இது தொடர்பான உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என அந்த பணியகம் தெரிவித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் போலியான விண்ணப்ப படிவங்களுக்கு தகவல்களை வழங்க வேண்டாம் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு கொரிய மொழி பரீட்சைக்கு தோற்ற உள்ள மாணவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் உத்தியோகப்பூர்வ வலைத்தளங்களில் விண்ணப்பப்படிவங்களை பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன்படி, இந்தமாதம் 26ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை கொரிய மொழி பரீட்சைக்கான விண்ணப்பங்கள் வெளியிடப்படும் எனவும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇