இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் செயற்திட்டங்களின் ஒரு அம்சமாக நல்லிணக்கத்திற்காக சர்வமதங்களைச் சேர்ந்த சிறார்களுக்கான ஓவியப் போட்டி மற்றும் பாரம்பரிய கலைநிகழ்வுகள் 06.11.2023 அன்று இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் திட்ட முகாமையாளர் நிரோஷா அந்தோனி தலைமையில் காத்தான்குடி சிறுவர் அபிவிருத்தி பராமரிப்பு நிலையத்தில் இடம்பெற்றது.
நிகழ்வுகளின் நிறைவில் நிகழ்வுகளில் பங்குபற்றிய சிறார்களுக்கு பணப் பரிசுகளும், ஆடைகளும் காத்தான்குடி முஸ்லிம் சமூக கொடையாளர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டன. அதேவேளை சர்வமத பிரமுகர்களுக்கு பணக் கொடுப்பனவும் கொடையாக வழங்கப்பட்டது.
நிகழ்வில் தேசிய சமாதானப் பேரவையின் திட்ட அலுவலர் ரீ. லோகிதாஸ் மட்டக்களப்பு மாவட்ட சர்வமதப் பேரவைக்கான உதவி இணைப்பாளர் எம்.ஐ. அப்துல் ஹமீட், செயற்குழுவின் செயலாளர் ஏ.எல். அப்துல் அஸீஸ், ஒருங்கிணைப்புச் செயலாளர் கே. சங்கீதா உட்பட பேரவையின் உறுப்பினர்களும், செயற்பாட்டாளர்களும் உள்ளுராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇