மட்டக்களப்பு மாவட்டத்திற்கு விஷேட விஜயம் மேற்கொண்ட சுகாதார அமைச்சர் வைத்திய கலாநிதி ரமேஷ் பத்திரண மட்டு போதனா வைத்தியசாலைக்கு கள விஜயமொன்றை மேற்கொண்டு வைத்தியசாலையில் நிலவும் குறைபாடுகளை கேட்டறிந்துள்ளார்.
வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி கே.கலாரஞ்சனி ஏற்பாட்டில் போதனா வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது,
குறித்த கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர்களான சிவ.சந்திரகாந்தன் மற்றும் எஸ்.வியாழேந்திரன் ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா, சுகாதார அமைச்சின் செயலாளர் வைத்தியகலாநிதி மஹிபால, சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியகலாநிதி அசேல குணவர்தன, மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் உட்பட சுகாதார துறை அதிகாரிகள், வைத்திய நிபுணர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇