26 அடி நீளமுள்ள பச்சை அனகோண்டா பாம்பு ஒன்றின் காணொளி ஒன்றை விஞ்ஞானியான ஃப்ரீக் வோங்க் என்வர் பதிவிட்டுள்ளார்.
அமேசான் மழைக்காடுகளில் இருந்து இந்த புதிய வகை பச்சை அனகோண்டாவை விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய பாம்பு என்று நம்பப்படும் அனகோண்டாவின் காணொளியை வோங்க் தமது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.
இந்த பாம்பு கார் டயரைப் போல தடிமனாகவும், எட்டு மீட்டர் நீளமாகவும், 200 கிலோவுக்கு மேல் எடையுடனும் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட இந்த இனப்பாம்பு “வடக்கு பச்சை அனகோண்டா” என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇