காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட புதிய காத்தான்குடி 166 ஏ கிராம உத்தியோகத்தர் பிரிவில் நான்கு சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் 100000/= நிதிப் பங்களிப்புடன் குறைந்த வருமானம் பெறும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு (20.02.2024) அன்று 166A பிரிவு சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.எம்.ஆர்.ஜாபிர் தலைமையில் 166A பிரிவு அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் 166A கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த 77 பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் உ.உதயசிறிதர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் திருமதி.பீ.ஜெயராஜ், சமுர்த்தி முகாமையாளர்கள், புதிய காத்தான்குடி வங்கி முகாமையாளர், மற்றும் பிரிவு கிராம உத்தியோகத்தர், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , பொருளாதார உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுதாய அடிப்படை அமைப்பின் தலைவிகள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது 166A கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த 77 பாடசாலை மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇