”சட்டங்களில் வாழ்வனுபவங்களை பிரதிபலித்தல்” எனும் தலைப்பில் கொழும்பில் நடைபெற்ற கருத்தாடல்!

 – 
English
 – 
en
Sinhala
 – 
si
Tamil
 – 
ta

“சட்டங்களில் வாழ்வனுபவங்களை பிரதிபலித்தல்” எனும் தலைப்பில் இலங்கையில் பால்நிலைசார் – நீதிக்கான குடும்பச் சட்டம் தொடர்பான தேசிய பெண்ணிய கருத்தாடலும், இலங்கையில் பால்நிலைசார் – நீதிக்கான குடும்பச் சட்டம் தொடர்பான தேசிய பெண்ணிய கருத்தாடலும் 20.09.2025 அன்று கொழும்பில் நடைபெற்றது.

இக்கருத்தாடலில் நாடு முழுவதிலும் உள்ள பல மாவட்டங்களில் இருந்து 100 இதற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த தேசிய கருத்தாடலானது பல பெண்கள் அமைப்புகள் மற்றும் செயற்பாட்டளர்களுடன் இணைந்து சூரியா மகளிர் அபிவிருத்தி நிலையத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.

நிகழ்வில், இலங்கையில் காணப்படும் குடும்பச் சட்ட கட்டமைப்புக்கள் மூலம் நீதி தேடும் மீண்டு வாழும் பெண்கள், பெண் வழக்குரைஞர்கள், சட்ட முன்னெடுப்பாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் ஆகியோர் தங்கள் அனுபவங்களையும் சவால்களையும் இங்கு பகிர்ந்து கொண்டனர். அத்துடன் திருமணம் மற்றும் திருமண உறவுகள், விவாகரத்து, சொத்துரிமைகள் மற்றும் நிதிசார் ஏற்பாடுகள், பிள்ளைகளுக்கான பாதுகாப்பு, பொறுப்பு மற்றும் நல்வாழ்வு, குடும்ப வன்முறைத் தடுப்பு மற்றும் பாதுகாப்பு என்பனவற்றுடன் குடும்பச் சட்ட செயன்முறைகள் உள்ளிட்ட பல்வேறுபட்ட குடும்பச் சட்டங்கள் ஆகிய விடயங்களில் குழுக்கள் கவனம் செலுத்தப்பட்டது.

சட்டத்திற்கான வாழ்நாள் பேராசிரியரும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பீடாதிபதியுமான பேராசிரியர் ஷர்யா ஸ்கார்னிவெல், ஏனைய நாடுகளில் காணப்படும் ஒப்பீட்டு குடும்பச் சட்ட சீர்திருத்தங்கள் குறித்த ஆழமான விளக்கங்களை வழங்கிய அதேவேளை அவற்றுள் இலங்கைக்கு பொருத்தமான மாதிரிகளை கோடிட்டுக் காண்பித்தார்.

மீண்டு வாழ்வோர் மற்றும் செயற்பாட்டாளர்களினால் எழுப்பப்பட்ட உறுதியான கோரிக்கைகள் மற்றும் குடும்பச் சட்ட சீர்திருத்தங்களுக்கான துறையில் நிபுணர்களால் ஆதரிக்கப்படும் பரிந்துரைகள் ஆகிய விடயங்கள் கருத்தாடலின் போது முன்மொழியப்பட்டன.

இதன் போது , பங்கேற்பாளர்களால் கூட்டாக உருவாக்கப்பட்டு, ஏகமனதாக அங்கீகரிக்கப்பட்ட இலங்கையின் குடும்பச் சட்டங்கள் மற்றும் சட்ட நடைமுறை தொடர்பானதொரு பெண்கள் பிரகடனமானது, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் தேசிய மகளிர் ஆணைக்குழு ஆகியவற்றின் பிரதிநிதிகளிடம் அதிகாரபூர்வமாக இந்த நிகழ்வில் கையளிக்கப்பட்டது.

இந்தப் பிரகடனத்தில் பின்வரும் முக்கிய பரிந்துரைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் விவரிக்கப்பட்டுள்ளன:

• தனித்துவத்தன்மை கொண்ட குடும்ப நீதிமன்றங்கள்

• குடும்பச் சட்டம் மற்றும் உரிமைகளுக்கான ஆணைக்குழுவை நிறுவுதல்

• அனைத்து குடும்பம் சார்ந்த விடயங்களிலும், தனிப்பட்ட சட்டம் உள்ளிட்ட அனைத்து சட்டங்களிலும் சுயாதீனமான மற்றும் தெரியப்படுத்தப்பட்ட ஒப்புதல்

• பிள்ளையின் மிகச் சிறந்த நலனுக்கு முக்கியத்துவம் அளித்தல்

• திருமணத்திற்குள்ளான பாலியல் வன்கொடுமை குற்றத்திற்கு வழிவகுக்கும் விடயங்கள்

• அனைத்து நபர்களுக்கும் குறைந்தபட்ச திருமண வயது 18 ஆக இருக்க வேண்டும் என்னும் விடயம

• பரஸ்பர ஒப்புதல் விவாகரத்து மற்றும் தவறுகளை அடிப்டையாகக் கொண்டிராத விவாகரத்து

• குடும்ப வன்முறையை எவ்விதத்திலும் சகித்துக் கொண்டிராத தன்மை

இலங்கையின் குடும்பச் சட்டங்கள் மற்றும் சட்ட நடைமுறை தொடர்பான பெண்கள் பிரகடனத்தில் நீங்கள் கையெழுத்திட விரும்பினால் இந்த லிங்க் https://taplink.cc/slfamilylaw இனூடாக கையொப்பமிட்டு இதற்கு ஒப்புதல் வழங்க முடியும்.

இந்த நிகழ்வில் மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சின் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார, மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் தேசிய மகளிர் ஆணைக்குழு ஆகியவற்றின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇

Loading

Candy Land Batticaloa
Facebook
Twitter
LinkedIn
WhatsApp

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Categories

Popular News

Our Projects