மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் என்.தனஞ்சயன் தலைமையில் இடம் பெற்ற கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்ட நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் மாநகர ஆணையாளரும் தற்போதைய கிரான் பிரதேச செயலாளருமான எஸ்.சித்திரவேல் கலந்து கொண்டு வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.
இதன் போது மட்டக்களப்பு மாநகர சபை வளாகமானது சட்ட ரீதியற்ற பணப் பரிமாற்றம் தடை செய்யப்பட்ட வளாகமாக மாற்றப்பட்டு இலஞ்ச ஊழல் ஒழிப்பு தொடர்பான பாதையை மாநகர சபை அலுவலக முன்றலில் திறந்து வைக்கப்பட்டது.
இரண்டாவது நிகழ்வாக பொதுமக்கள் இணையவழி ஊடாக தமது சேவைகளை பெற்றுக் கொள்ளும் இலகுவழி இணையத்தளம் மாநகர சபை வெப்சைட் நவீன தொழில் நுட்பத்துடன் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
மூன்றாவது நிகழ்வாக வீதிகளில் பொதுமக்கள் கழிவுகளை வீசிவிட்டு சுற்றுச்சூழலை அசுத்தப்படுத்துபவர்களை கண்டுபிடிப்பதற்காக மொபைல் சிசிடிவி கேமரா பொருத்தம் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு அதன் முதல் கட்டமாக மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியின் சத்துருக்கொண்டான் பகுதியில் மொபைல் சிசிடிவி கேமரா பொருத்தம் நடவடிக்கை ஆணையாளரின் வழிகாட்டுதலின் கீழ் இடம் பெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த ஆணையாளர் மாநகர சபை எல்லைப் பகுதியில் சட்ட விரோதமாக குப்பைகளை வீசுபவர்களை கண்டறிவதற்கு பல கேமராக்கல் பொருத்தப்படவுள்ளதுடன் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக இதன் போது தெரிவித்தார்.
இந் நிகழ்வில் மாநகர பொறியியலாளர் எல்.சித்ராதேவி, பிரதமர் கணக்காளர் கே அரசரட்னம், இயந்திர பொறியாளர் டி.யோகேந்திரன், மாநகர சபையில் கால்நடை வைத்தியர் சி.துசியந்தன் மற்றும் மாநகர சபை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.







இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇
![]()










