ஒரு ஜோடி பண்டா கரடிகளை அமெரிக்காவுக்கு வழங்க சீனா தீர்மானித்துள்ளது.
ரஷ்யா மற்றும் உக்ரைன் போர், தாய்வான் விவகாரம் உள்ளிட்ட காரணங்களால் அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.
இதனை தணிக்கும் நோக்கிலும், இருநாடுகளின் உறவினை மேம்படுத்துவதற்காகவும், குறித்த பண்டா கரடிகளை வழங்க சீனா முன்வந்துள்ளது.
அமெரிக்க கலிப்போர்னியாவில் உள்ள சான்பிராஸ்சிஸ்கோ உயிரியல் பூங்காவுக்கு குறித்த பண்டாக் கரடிகள் வழங்கப்படவுள்ளன.
இரு நாடுகளுக்கும் இடையே உறவுகள் விரிசல் அடைந்தமையால் அமெரிக்க உயிரியல் பூங்காக்களுக்கு அடையாளமாக வழங்கப்பட்ட கரடிகளையும் சீனா திரும்பப் பெற்றது.
இந்த நிலையில், அமெரிக்காவுடனான தனது நீண்டகால நட்பைப் புதுப்பித்து, உயிரியல் பூங்காவிற்கு புதிய ஜோடி பாண்டாக் கரடிகளை அனுப்ப சீனா திட்டமிட்டுள்ளது.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇