ஜனாதிபதித் தேர்தலுக்கான அஞ்சல் திணைக்களத்தின் செலவினங்களை மதிப்பீடு செய்து 1.4 பில்லியன் ரூபாய் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரதி தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
சாதாரண தபால், பதிவுத் தபால், எழுது பொருட்கள், போக்குவரத்து, நிர்வாகக் கட்டணம் உள்ளிட்ட பல செலவினங்களுக்காக இந்த மதிப்பீடு செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், இந்த மதிப்பீடு ஒரு முன்னறிவிப்பு மட்டுமே என்பதால், கோரப்பட்ட பணத்தில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இச் செய்தியினை ஏனையவர்களுக்கும் பகிர…👇👇